நெல் சாகுபடி முறைகள், நாற்றங்கால் தயாரித்தல், முக்கிய நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் – இன்றைய விவசாய தகவல் (02-09-2025)
நெல் பயிர்: புல்வகை தானியங்களில் முன்னிலை
நெல் என்பது புல்வகையைச் சேர்ந்த ஒரு முக்கிய தானிய பயிராகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளே இதன் பூர்விகம். இந்தியாவில் நெல், தானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தென் இந்திய மக்களின் அன்றாட உணவில் அரிசி மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
உலகளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடத்தில் உள்ளது. சோளம், கோதுமை ஆகியவற்றிற்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் இதுவாகும். நெல்லின் மேலுள்ள உமி கால்நடைகளுக்கான தீவனமாகவும், ஆல்கஹால் உற்பத்தி தொழிற்சாலைகளிலும், கோழி தீவனமாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
நாற்றங்கால் தயாரிப்பு

- 1 ஏக்கருக்கு 30–40 கிலோ தரமான விதை நெல் போதுமானது.
- விதைகள் 8–10 மணி நேரம் ஊறவைத்து ஈரப்பையில் முளைக்க வைக்கப்பட வேண்டும்.
- நிலம் நன்கு உழுது, தழைச்சத்து மற்றும் தொழுவுரம் சேர்த்து, முளைக்கட்டிய விதைகளை சீராகத் தூவ வேண்டும்.
- 30 நாட்களில் நாற்றுகள் 10 செ.மீ வளர்ந்து நடவு செய்யத் தயாராகும்.
- நாற்றுகள் 20–30 நாட்கள் ஆனபின் நிலம் தயாரித்து, நன்கு நீர் பாய்ச்சிய நிலையில் நடவு செய்ய வேண்டும்.
- 10 செ.மீ இடைவெளியில், 2–3 நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.
- வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்சி, களைகளை அகற்ற வேண்டும்.
- சீரான பராமரிப்பில் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
1. குலை நோய் (Blast – Pyricularia oryzae)
எல்லா வளர்ச்சி நிலைகளிலும் தாக்கம்.
இலைகளில் மனித கண் வடிவ புள்ளிகள்.
தண்டு சாய்தல் ஏற்படலாம்.
தடுப்பு: எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகள் (IR-36, MTU 1005), அறுவடைக்கு பின் வைக்கோல் எரித்தல்.
2. கதிர்க்காம்பு குலை நோய்
கதிர்க்காம்பு கருமையடைந்து உடைந்து தொங்கும்.
3. இலை கருகல் (Bacterial Blight)
நாற்று வாடல், மஞ்சள் கோடுகள்.
தடுப்பு: நோயில்லா விதைகள், அதிக நீர் வடிகட்டி, சுவர்ணா, தீப்தி போன்ற எதிர்ப்பு வகைகள்.
4. கதிர் உறை அழுகல்
ஒழுங்கற்ற புள்ளிகள், வெள்ளை பொடி போன்ற படர்தல்.
கதிர்கள் ஆரோக்கியமின்றி அம்மிப் போல் காணப்படும்.
5) செம்புள்ளி நோய்
இலை, நாற்று, கதிர்கள் பாதிப்பு.
50% வரை விளைச்சல் இழப்பு.
தடுப்பு: விதைகளை வெந்நீரில் (53–54°C) 10–12 நிமிடம் வைத்துச் சுத்திகரித்தல்.
6) நெற்பழம் (False Smut)
கதிர்களில் சில நெல் மணிகள் மஞ்சள்–பச்சை கருமை நிறமாக மாறுதல்.
தடுப்பு: காய்ந்த அடிதண்டுகளை அழித்தல்.
7) துங்ரோ நச்சுயிரி (Tungro Virus)
கட்டுடை வளர்ச்சி, கதிர்கள் குறைவு.
தடுப்பு: MTU 9992, IR-36 போன்ற எதிர்ப்பு வகைகள், பயிறு மற்றும் எண்ணெய் விதைகளை சுழற்சியில் பயிரிடல்.
அரிசியின் ஆரோக்கிய பயன்கள்
அதிக கார்போஹைட்ரேட் – உடலுக்கு சக்தி.
பச்சரிசி – எடை அதிகரிக்க உதவும்.
சிகப்பு அரிசி – பைபர் நிறைந்தது, ரத்தக் கொழுப்பு குறைக்க உதவும்.