நிர்மலராஜன் படுகொலை வழக்கில் அறிவிக்கை
இலங்கை ஊடகவியலாளர் நிர்மலராஜன் படுகொலை வழக்கில் நீதி கோரி, வடக்கு கிழக்கு சமூக இயக்கம் ஒருங்கிணைப்பில் ஒரு சிறப்பு அறிவிக்கை திருகோணமலை கடற்கரை பகுதியில் செப்டெம்பர் 12 மாலை வெளியிடப்படுகிறது.
இந்த நிகழ்வு மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் ஊடகவியலாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து நீதியினை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
அறிவிக்கையின் மூலம், ஊடகவியலாளர் சமூகத்தின் பாதுகாப்பு, கருத்துரிமை மற்றும் நீதிக்கான உரிமைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தப்படவுள்ளது.
ஏற்பாடு: வடக்கு கிழக்கு சமூக இயக்கம் – திருகோணமலை மாவட்டம்.
















