மூதூர் சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி
திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி, இன்று (15) காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இப்பவணி, தங்கபுரம் தங்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
இந்த பவணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைவ பக்த அடியார்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
குறிப்பிடத்தக்க வகையில், பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று நடைபெற்ற பாற்குடப் பவணியுடன் நிறைவடைந்தது.





















