Ten To 10 கிரிக்கெட் – ஸ்பென்ஸ் அணி சாம்பியன்
திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய Ten To 10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் இந்துக்கல்லூரி கிரிக்கெட் அணி மற்றும் ஸ்பென்ஸ் விளையாட்டுக்கழகம் பங்கேற்றன. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரி அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
அவ்விலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்பென்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் மீதமிருந்து வெற்றி பெற்று, 2025 ஆம் ஆண்டிற்கான திருகோணமலை மாவட்ட Ten To 10 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சிறந்த வீரர்கள் தேர்வு:
- சிறந்த பந்துவீச்சாளர் – ஸ்பென்ஸ் அணியின் ரிச்சர்ட்
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – இந்துக்கல்லூரி அணியின் மனோசாந்
- சிறந்த களத்தடுப்பாளர் – ஸ்பென்ஸ் அணியின் மகேஸ்வரன்
- இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் – ரிச்சர்ட் (ஸ்பென்ஸ் அணி)
இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக, மாநகரசபை உறுப்பினர் இரா.சற்பரூபன், மாநகரசபை உறுப்பினர் மற்றும் திருகோணமலை கிரிக்கெட் சங்கத்தின் உபதலைவர் தி.பிரபாதரன், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பா.வசந்தகுமார், செயலாளர் கி.பிரேமானந்த் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் நஸீர், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.























