• Home
  • செய்திகள்
  • நெல் சாகுபடி முறைகள் மற்றும் நோய் தடுப்பு – இன்றைய விவசாய தகவல் (02-09-2025)
Image

நெல் சாகுபடி முறைகள் மற்றும் நோய் தடுப்பு – இன்றைய விவசாய தகவல் (02-09-2025)

நெல் சாகுபடி முறைகள், நாற்றங்கால் தயாரித்தல், முக்கிய நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் – இன்றைய விவசாய தகவல் (02-09-2025)

நெல் பயிர்: புல்வகை தானியங்களில் முன்னிலை

நெல் என்பது புல்வகையைச் சேர்ந்த ஒரு முக்கிய தானிய பயிராகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளே இதன் பூர்விகம். இந்தியாவில் நெல், தானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தென் இந்திய மக்களின் அன்றாட உணவில் அரிசி மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

உலகளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடத்தில் உள்ளது. சோளம், கோதுமை ஆகியவற்றிற்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் இதுவாகும். நெல்லின் மேலுள்ள உமி கால்நடைகளுக்கான தீவனமாகவும், ஆல்கஹால் உற்பத்தி தொழிற்சாலைகளிலும், கோழி தீவனமாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நாற்றங்கால் தயாரிப்பு
  • 1 ஏக்கருக்கு 30–40 கிலோ தரமான விதை நெல் போதுமானது.
  • விதைகள் 8–10 மணி நேரம் ஊறவைத்து ஈரப்பையில் முளைக்க வைக்கப்பட வேண்டும்.
  • நிலம் நன்கு உழுது, தழைச்சத்து மற்றும் தொழுவுரம் சேர்த்து, முளைக்கட்டிய விதைகளை சீராகத் தூவ வேண்டும்.
  • 30 நாட்களில் நாற்றுகள் 10 செ.மீ வளர்ந்து நடவு செய்யத் தயாராகும்.
நெல் பயிரிடும் முறை
  • நாற்றுகள் 20–30 நாட்கள் ஆனபின் நிலம் தயாரித்து, நன்கு நீர் பாய்ச்சிய நிலையில் நடவு செய்ய வேண்டும்.
  • 10 செ.மீ இடைவெளியில், 2–3 நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.
  • வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்சி, களைகளை அகற்ற வேண்டும்.
  • சீரான பராமரிப்பில் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
நெற்பயிரின் முக்கிய நோய்கள் மற்றும் கட்டுப்பாடு

1. குலை நோய் (Blast – Pyricularia oryzae)

எல்லா வளர்ச்சி நிலைகளிலும் தாக்கம்.
இலைகளில் மனித கண் வடிவ புள்ளிகள்.
தண்டு சாய்தல் ஏற்படலாம்.

தடுப்பு: எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகள் (IR-36, MTU 1005), அறுவடைக்கு பின் வைக்கோல் எரித்தல்.

2. கதிர்க்காம்பு குலை நோய்
கதிர்க்காம்பு கருமையடைந்து உடைந்து தொங்கும்.

3. இலை கருகல் (Bacterial Blight)
நாற்று வாடல், மஞ்சள் கோடுகள்.

தடுப்பு: நோயில்லா விதைகள், அதிக நீர் வடிகட்டி, சுவர்ணா, தீப்தி போன்ற எதிர்ப்பு வகைகள்.

4. கதிர் உறை அழுகல்
ஒழுங்கற்ற புள்ளிகள், வெள்ளை பொடி போன்ற படர்தல்.
கதிர்கள் ஆரோக்கியமின்றி அம்மிப் போல் காணப்படும்.

5) செம்புள்ளி நோய்
இலை, நாற்று, கதிர்கள் பாதிப்பு.
50% வரை விளைச்சல் இழப்பு.

தடுப்பு: விதைகளை வெந்நீரில் (53–54°C) 10–12 நிமிடம் வைத்துச் சுத்திகரித்தல்.

6) நெற்பழம் (False Smut)
கதிர்களில் சில நெல் மணிகள் மஞ்சள்–பச்சை கருமை நிறமாக மாறுதல்.

தடுப்பு: காய்ந்த அடிதண்டுகளை அழித்தல்.


7) துங்ரோ நச்சுயிரி (Tungro Virus)
கட்டுடை வளர்ச்சி, கதிர்கள் குறைவு.

தடுப்பு: MTU 9992, IR-36 போன்ற எதிர்ப்பு வகைகள், பயிறு மற்றும் எண்ணெய் விதைகளை சுழற்சியில் பயிரிடல்.

அரிசியின் ஆரோக்கிய பயன்கள்
அதிக கார்போஹைட்ரேட் – உடலுக்கு சக்தி.
பச்சரிசி – எடை அதிகரிக்க உதவும்.
சிகப்பு அரிசி – பைபர் நிறைந்தது, ரத்தக் கொழுப்பு குறைக்க உதவும்.

சார்ந்த செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிமீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது; சுனாமி அபாயம் இல்லை இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து…

செப் 19, 2025
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்

மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்

மர்மமான அஷ்ரப் மரணம் மற்றும் முஸ்லிம் சமூக அரசியலில் தாக்கம் மறைந்த மர்ஹும் அஷ்ரப் இலங்கை அரசியலில் மற்றும் முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு…

செப் 18, 2025
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்

தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்

பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் “தகைசால் தமிழர் விருது” பெறுகிறார். இந்தியாவின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசின்…

செப் 18, 2025
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

ஜே.ஜே. முரளிதரன் ஓய்வு – ஜே.எஸ். அருள்ராஜ் புதிய மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்/அரசு முகவராக பணியாற்றி வந்த, இலங்கை…

செப் 17, 2025

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது