• Home
  • Uncategorized
  • திருகோணமலை எலும்பியல் பிரிவு – காணி பிரச்சினை காரணமாக திட்டம் இடைநிறுத்தம்

திருகோணமலை எலும்பியல் பிரிவு – காணி பிரச்சினை காரணமாக திட்டம் இடைநிறுத்தம்

திருகோணமலை பொதுவைத்தியசாலையின் எலும்பியல் பிரிவு கட்டிடம் காணி இல்லாமை காரணமாக இடைநிறுத்தம் – நோயாளிகள் சிகிச்சைக்கு அநுராதபுரம், கொழும்பு செல்ல வேண்டுமா என்ற கேள்வி

திருகோணமலை பொதுவைத்தியசாலையில் எலும்பியல் துறைக்கான (Orthopedic Unit) புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்வைக்கப்பட்ட திட்டம், தேவையான காணி இல்லாததால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, அங்குள்ள Orthopaedic Surgeon ஒருவர் இடமாற்றம் கோரி செல்ல உள்ளார் என்ற தகவலும் பரவியுள்ளது. இந்த நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

தற்போது திருகோணமலையில் எலும்பியல் சிகிச்சை பெறும் நோயாளர்கள், எலும்புமுறிவு மற்றும் பிற சிக்கலான சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் அல்லது கொழும்பு செல்ல வேண்டிய சூழல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவ சேவைகளின் தரமும், நோயாளிகளின் அவசர சிகிச்சை வசதிகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதில் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தைப் பற்றி கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஷான் அக்மீம, எஸ்.கே. குகதாசன், இம்ரான் மகரூப் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு காணப்படும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது