திருகோணமலை பொதுவைத்தியசாலையின் எலும்பியல் பிரிவு கட்டிடம் காணி இல்லாமை காரணமாக இடைநிறுத்தம் – நோயாளிகள் சிகிச்சைக்கு அநுராதபுரம், கொழும்பு செல்ல வேண்டுமா என்ற கேள்வி
இதனையடுத்து, அங்குள்ள Orthopaedic Surgeon ஒருவர் இடமாற்றம் கோரி செல்ல உள்ளார் என்ற தகவலும் பரவியுள்ளது. இந்த நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
தற்போது திருகோணமலையில் எலும்பியல் சிகிச்சை பெறும் நோயாளர்கள், எலும்புமுறிவு மற்றும் பிற சிக்கலான சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் அல்லது கொழும்பு செல்ல வேண்டிய சூழல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ சேவைகளின் தரமும், நோயாளிகளின் அவசர சிகிச்சை வசதிகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதில் உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தைப் பற்றி கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஷான் அக்மீம, எஸ்.கே. குகதாசன், இம்ரான் மகரூப் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு காணப்படும் என எதிர்பார்த்து வருகின்றனர்.












